முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகும் அவசியம் இல்லை என முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் இங்கிலாந்து பயணம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (01.08) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் இதற்கு முன்னரும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.