1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹாஷ் போதைப்பொருளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பிரிவிற்குற்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரத்மலானை பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதித்து செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து 01.05 கிலோகிராம் ஹாஷ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 100,000 தொகையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ரத்மலானை பகுதியில் மாதந்தோறும் ரூ. 30,000 வாடகைக்கு விடப்பட்ட வீட்டில் இருந்து இந்தக் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.