வடக்கில் விளையாட்டுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீண்டகால திட்டமான, யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இன்று (01.09) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அடிகள் நாட்டினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் உயர் மட்டத்தில் ஒன்றாக பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில், தேசிய கிரிக்கெட் அணியில் அதிக பன்முகத்தன்மையைக் காண விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவிடம், மைதானத்தின் தயார்நிலைக்கான காலக்கெடு குறித்து ஜனாதிபதி கேட்ட கேள்விக்கு, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த மைதானம் அதன் முதல் உள்நாட்டு போட்டியை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுவாதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு சர்வதேச போட்டியை நடத்த முடியும் என்றும் பதிலளித்துள்ளார்.