புகையிரத தொழிற்சங்க நடவடிக்கையானது மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தால், புகையிரத திணைக்களம் இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து மாற்று வழிகளை தேடி கையாளும் எனவும் திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலங்களிலும் கொவிட் தொற்று காலப்பகுதியிலும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடருமானால் உடனடியாக மாற்று வழிகளை கையாள திணைக்களம் நடவடிக்கை எடுக்க தயங்காது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தமது முரண்பாடுகள் குறித்து புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்திடம் நேற்றைய தினம் (13/12) கலந்துரையாடுமாறு கோரப்பட்ட போதிலும் அவர்கள் அதனை நிராகரித்துள்ளதாக தம்மிக்க ஜயசுந்தர சுட்டிக்காட்டினார்.