இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள T20 சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடருக்கான இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்த அணியில் ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரில் தனது திறமையை வெளிப்படுத்திய பவான் ரத்நாயக்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று குஷல் ஜனித் பெரேரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏனைய வீரர்கள் எதிர்பார்க்கபப்ட்ட வீரர்கள் அணியில் சேர்க்கபப்ட்டுள்ளனர். T20 உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக விளையாடும் தொடர் என்பதனால் இந்த தொடரும் அணியும் முக்கியமானதாக அமைகிறது.
30 ஆம் திகதி ஆரம்பிக்கும் இந்த தொடரின் இரண்டாவது போட்டி 01 ஆம் திகதியும், மூன்றாவது போட்டி 03 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
அணி விபரம்
தசுன் ஷானக (தலைவர்)
பத்தும் நிஸ்ஸங்க
குசல் மென்டிஸ்
கமில் மிஷாரா
குசல் பெரேரா
சரித் அசலங்க
தனஞ்சய டி சில்வா
ஜெனித் லியனகே
பவன் ரத்நாயக்க
வனிந்து ஹசரங்க
டுனித் வெல்லாலகே
பிரமோத் மதுஷான்
துஷ்மந்த சமீர
மகீஷ் தீக்ஷண
எஷான் மாலிங்க
மதீஷ பத்திரண