இந்தியாவை வென்றது நியூசிலாந்து

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 20 ஓவர்கள் கொண்ட நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் பெற்றது. டிம் செய்ஃபர்ட் 36 பந்துகளில் 62 ஓட்டங்களும், டெவான் கான்வே 23 பந்துகளில் 44 ஓட்டங்களும் பெற்று அணிக்கு சிறந்த ஆரம்பத்தை வழங்கினார். இறுதியில் டேரில் மிட்செல் 18 பந்துகளில் 39 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வேகமான முடிவை வழங்கினார்.

இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

216 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. முக்கிய வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்ததால் அழுத்தம் அதிகரித்தது. சிவம் டூபே 23 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்று போராட்டம் நடத்தியத போதும் திரதிஷ்டவமாக மறு முனை துடுப்பாட்ட வீரர் அடித்தாடிய பந்து பந்துவீச்சாளரின் கையில் பட்டு விக்கெட்டை தகர்க்க ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 39 ஓட்டங்களை பெற்றார்.

18.4 ஓவர்களில் இந்திய அணி 165 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து பந்துவீச்சில் அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இஷ் சோதி மற்றும் ஜேக்கப் டஃபி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்தியா அணி இந்த தொடரில் 4-1 என முன்னிலை பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply