பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது 20-20 போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி 3 போட்டிகளடங்கிய தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. 90 ஓட்டங்களினால் பாகிஸ்தான் அணி அபார வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது.
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அஹா சல்மான் 76 ஓட்டங்களையும், உஸ்மான் கான் 53 ஓட்டங்களையும், ஷடாப் கான் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 15.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 108 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. கமரூன் க்ரீன் 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அபர் அஹமட், ஷடாப் கான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினர்.