இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (31.01) நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியான T20 போட்டியில் இந்தியா அணி 46 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 4-1 என்ற முறையில் தொடரை கைப்பற்றியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டியாவின் அதிரடியினால் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இது இந்தியா அணியின் T20களில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களாகும். இந்தியா அணியின் துடுப்பாட்டத்தில் இஷன் கிஷன் 103(43) ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 63(30) ஓட்டங்களையும், ஹார்டிக் பாண்டியா 42(17) ஓட்டங்களையும், அபிஷேக் ஷர்மா 30(16) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்த சதம் இஷன் கிஷனின் முதலாவது T20 சதமாகும்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் லொக்கி பெர்குசன் 2 விக்கெட்களையும், மிச்சல் சன்ட்னெர், கைல் ஜேமிசன், ஜேகப் டபி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
272 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றது. நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் பின் அலென் 80(38) ஓட்டங்களையும், இஷ் சோதி 33(15) ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரா 30(17) ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தியா அணியின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களையும், அக்ஷர் படேல் 3 விக்கெட்களையும், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்த போட்டியே 2 ஆவது அதிக 6 ஓட்டங்கள் அடிக்கப்பட்ட போட்டியாகும். 36 6 ஓட்டங்கள் இந்த போட்டியில் அடிக்கப்பட்டுள்ளன.
இந்த போட்டியின் நாயகனாக இஷன் கிஷன் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த தொடரின் நாயகனாக சூர்யகுமார் யாதவ் தெரிவு செய்யப்பட்டார்.