இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 44 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 01 முதல் பிப்ரவரி 20 வரை இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு, சட்டவிரோத மின்சார வேலி அமைப்புகள், ரயில் விபத்துகள் மற்றும் நீரில் மூழ்குதல் ஆகிய காரணங்களால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில், அதே காலப்பகுதியில் காட்டு யானை தாக்குதல்களால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.