கொழும்பு துறைமுக நகர கடற்பரப்பில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

கொழும்பு துறைமுக நகர கடற்பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடலில் சடலம் ஒன்று காணப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து கொழும்பு துறைமுகப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

மரணமடைந்தவர் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், அவர் கடந்த 28ம் திகதி கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுகப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply