எரிபொருள் வரிசைகளை உருவாக்க வேண்டாம்!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையையடுத்து நாட்டில் ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பெட்ரோல் 27 நாட்களுக்கும், டீசல் 31 நாட்களுக்கும், சூப்பர் டீசல் 72 நாட்களுக்கு மற்றும் விமான எரிபொருள் 47 நாட்களுக்கு போதுமான அளவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கைத் தவிர India மற்றும் Singapore ஆகிய நாடுகளிலிருந்தும் எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லாத நிலையிலும் சிலர் சட்டவிரோதமாக கொள்கலன்களில் சேமித்து விற்பனை செய்ய முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவு,
இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் கடுமையான சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதனால் தேவையற்ற வகையில் எரிபொருள் சேமிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply