இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மூழ்கியது!

ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் மூழ்கியதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 104 கடற்படை வீரர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானின் Fars செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 4ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம், தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா–ஈரான் மோதலின் ஒரு பகுதியாகும்.

ஈரான் அதிகாரிகள் கூறுகையில், இலங்கைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் கடற்பரப்பில் பணியில் இருந்தபோது அந்த கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் டார்பிடோ தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply