சமூக ஊடகங்களில் வைரலான ஆபத்தான மோட்டார் சைக்கிள் ஓட்டம் தொடர்பான வீடியோவையடுத்து, 19 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நவகத்தேகம – ஆணைமடுவை வீதியில் மோட்டார் சைக்கிளை ஆபத்தான முறையில் ஓட்டி வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
நவகத்தேகம பொலிஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபரை மோட்டார் சைக்கிளுடன் கைது செய்தனர்.
சந்தேக நபர் இன்று ஆணைமடுவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.