இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர் நலன்கள் தொடர்பாக மின்சாரத் துறை தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (13.03) நடைபெறவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை மின்சார சபை தொழில்நுட்பப் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க உள்ளிட்ட 22 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் மற்றும் அதனால் ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இன்றைய கலந்துரையாடலின் முடிவுகளைப் பொறுத்தே தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.