இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் இருவர் கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
Ali Larijani ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளராக இருந்த இவர், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவருடன் அவரது மகன் மொர்தேசா லாரிஜானி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சிலரும் உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், Gholamreza Soleimani ஈரானின் துணை இராணுவப் படையான Basij பிரிவின் தளபதி இவரும் தனித்தனியாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.
இந்தத் தலைவர்களின் இறப்பை ஈரான் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதற்காக இஸ்ரேல் மீது “பதிலடித் தாக்குதல்” நடத்தப்படும் என்று ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, லாரிஜானி ஈரானின் மிக முக்கியமான பாதுகாப்புத் தலைவராகக் கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு தலைவர்களுக்கான இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (18.02) காலை தெஹ்ரானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது