இலங்கை வான்படை (SLAF) அனுமதி இன்றி ட்ரோன்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், உயர் பாதுகாப்பு பகுதிகளில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கியவர்களுக்கு எதிராக முன்பும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ட்ரோன் இயக்க விரும்பும் அனைவரும் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி தேவையான அனுமதிகளை கட்டாயமாகப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ட்ரோன் பயனாளர்கள் சட்ட சிக்கல்களில் சிக்காமல் இருக்கவும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக இலங்கை வான்படை தெரிவித்துள்ளது.