நிட்டம்புவ பகுதியில் எரிபொருள் QR குறியீட்டை மாற்றி புதிய குறியீடு உருவாக்கி சட்டவிரோதமாக எரிபொருள் பெற்றதாகக் கூறப்படும் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
1919 ஹட்லைன் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் புகார் அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, CID-இன் சைபர் குற்றப்புலனாய்வு பிரிவு சந்தேகநபரின் செயல்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டது.
விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட நபர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மாற்றியமைக்கப்பட்ட QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருள் வழங்கியவர்களையும் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எரிபொருள் QR குறியீடுகளை மாற்றியமைக்கும் நபர்களுக்கு எதிராக விசேட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக CID தெரிவித்துள்ளது.