தொடரும் வெப்பம் – சில பகுதிகளில் மழைக்கு சாத்தியம்

நாட்டில் நிலவி வரும் அதிக வெப்பமான வானிலை தொடர்ந்து நீடிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், இதனால் வெப்பம் அதிகரித்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply