சம்பியன்ஸ் லீகின் காலிறுதியில் அத்லெடிகோ மட்ரிட், பரிஸ் செயின்ட் ஜேர்மன் அணிகள் வெற்றி

அத்லெடிகோ மட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கிடையில் இன்று (15.04) சம்பியன்ஸ் லீகின் காலிறுதிப் போட்டியாக மட்ரிட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் அடிப்படையில் போட்டியை வெற்றி பெற்றிருந்தாலும் அத்லெடிகோ மட்ரிட் அணி இரண்டு போட்டிகளிலும் 3-2 என்ற மொத்த கோல்களின் அடிப்படையில் அத்லெடிகோ மட்ரிட் அணி அரையிறுதியிற்கு தெரிவாகியுள்ளது.

பரிஸ் செயின்ட் ஜேர்மன் மற்றும் லிவர்பூல் அணிகளுக்கிடையில் சம்பியன்ஸ் லீகின் காலிறுதிப்போட்டியாக லிவர்பூலில் நடைபெற்றது. இந்த போட்டியில் பரிஸ் செயின்ட் ஜேர்மன் அணி 2-0 என்ற கோல் அடிப்படையில் போட்டியை வெற்றி பெற்று 4-0 என்ற மொத்த கோல்கள் அடிப்படையில் அரையிறுதியிற்கு தெரிவாகியுள்ளது.

Social Share

Leave a Reply