வவுனியா – பம்பைமடு கிராம சேவை அலுவலக பிரிவுக்குட்பட்ட – கற்பகப்புரம் கிராமத்தில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.
குறித்த வெடிப்புச் சம்பவம் இன்று (15/12) காலை ரமேஷ; ராகினி என்பவரது வீட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த நபருக்கு விபத்தின் போது சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகி வரும் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் பொதுமக்கள் உயிர்வாழும் அச்சுறுத்தல்களுக்கு நாளாந்தம் தள்ளப்பட்டுள்ளதுடன், எண்ணிலடங்காத இந்த வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்வடைந்துக்கொண்டு செல்வது இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும்.