தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17 வது பொது தேர்தல் வாக்குப்பதிவு இன்று (23.04) வியாழக்கிழமை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவில் தமிழக முழுவதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.
234 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி- அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி- நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்- செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி- மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.