எஹெலியகொடவின் பாவில பகுதியில் உள்ள ஒரு நிலத்தினுள் 41 வயதுப் பெண்ணின் சடலம் ஒன்று நேற்று (04.05) கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
குருவிட்டவைச் சேர்ந்த அப்பெண்ணின் கழுத்தில் கூர்மையான வெட்டுக் காயங்கள் இருந்ததாக பொலீசார் தெரிவித்தனர்.
கொலைக்குப் பின்னணியில் உள்ள சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக சடலம் இரத்தினபுர மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.