மேல் , சபரகமுவ, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (13.05) அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேற்கு, சபரகமுவ மாகாணங்கள், புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களில் 200 மி.மீ-க்கு மேல் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டிற்கு அருகில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.