விசா அனுமதிகள் இல்லாமல் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது!

செல்லுபடியாகும் விசா அனுமதிகள் இல்லாமல் தங்கியிருந்ததற்காக கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்ட 49 சீன மற்றும் மலேசிய நாட்டினர், நேற்று (13.05) கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மே 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கொள்ளுப்பிட்டி பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் சுற்றுலா விசாக்களில் கம்போடியாவிலிருந்து இலங்கைக்குள் நுழைந்ததாகவும், ஆனால் முறையான அங்கீகாரம் இல்லாமல் தங்கியிருந்தது கண்டறியப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply