இலங்கை ரூபாய் இந்த மே மாதத்தில் ஆசியாவின் மிக மோசமாக செயல்படும் நாணயமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. “பொருளாதார ஸ்திரத்தன்மை” என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் பேரழிவான நிலக்கரி கொள்முதல் தவறுகள், கடுமையான வெளிநாட்டு நாணய நெருக்கடியை உருவாக்கியுள்ளது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசின் முழுமையான நிர்வாகத் திறனின்மைக்கான விலையை இன்று சாதாரண மக்கள் செலுத்தி வருவதாகவும், ரூபாயை நிலைநிறுத்த, டொலரின் உயர்வை கட்டுப்படுத்த, மற்றும் சாதாரண இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க அரசாங்கத்தின் திட்டம் எங்கே எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.