புகையிலைப் பயன்பாட்டினால் ஆண்டுதோறும் 22,000 மரணங்கள்!

இலங்கையில் புகையிலைப் பயன்பாட்டினால் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபையின் (NATA) தகவல் வெளியிட்டுள்ளது.

புகையிலை தொடர்பான பொருளாதார இழப்புகள் ஆண்டுதோறும் சுமார் ரூ. 214 பில்லியன் ஆக உள்ளது என்றும், அதே வேளையில் ஒவ்வொரு ஆண்டும் 9 முதல் 11 மில்லியன் வரையிலான சிகரெட் ஃபில்டர்கள் சுற்றுச்சூழலில் வீசப்படுகின்றன என்றும் NATAவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Social Share

Leave a Reply