எரிபொருள் விலை திருத்தத்தில் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது!

உலக சந்தை நிலவரங்களைப் பொருத்தவரை, அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தில் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு போருக்கு முன்னரிருந்த நிலையை விட உலக சந்தையில் எரிபொருள் விலை இன்னும் உயர்வாக உள்ளதாகவும், இன்றைய (29.05) உலக சந்தை விலை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் உள்நாட்டு விலை தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், எரிபொருள் விலையில் சிறிய உயர்வு ஏற்படுமா அல்லது தற்போதைய விலையே தொடருமா என்பது தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply