முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி, மாப்பகந்த தெற்கு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தாய், மகன் மற்றும் மேலும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் குறித்த பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது திடீரென பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததன் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

Social Share

Leave a Reply