FIFA உலகக்கிண்ணம் 2026: அமெரிக்கா அபார வெற்றி, கனடா, பொஸ்னியா போட்டி சமநிலை

2026 FIFA உலகக்கிண்ணக் காற்பந்து தொடரில் இணை நடத்துநாடுகளான கனடா மற்றும் அமெரிக்கா தங்களது முதல் குழுநிலைப் போட்டிகளில் வெவ்வேறு முடிவுகளைப் பதிவு செய்தன.

அதிகாலை 12.30 இற்கு நடைபெற்ற குழு B போட்டியில், கனடா மற்றும் பொஸ்னியா & ஹெர்சிகோவினா அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்தன. போட்டியின் 21 ஆவது நிமிடத்தில் ஜோவோ லூகிச் அடித்த கோலால் பொஸ்னியா முன்னிலை பெற்றது. எனினும், மாற்று வீரராக களமிறங்கிய சைல் லரின் 76ஆவது நிமிடத்தில் சமநிலை கோலை அடித்து கனடாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

அதிகாலை 06.30 இற்கு நடைபெற்ற மற்றொரு குழு D போட்டியில், அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பரகுவேயை வீழ்த்தி உலகக்கிண்ணப் பயணத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது. 7 ஆவது நிமிடத்தில் பராகுவே அணியின் சுயகோலின் மூலம் முன்னிலை பெற்ற அமெரிக்காவுக்கு, போலரின் பாலோகன் 32 ஆவது நிமிடத்தில் 2 ஆவது கோலையும், 45+ 5 ஆவது நிமிடத்தில் 3 ஆவது கோலை அடித்தார். பரகுவே சார்பில் மொரிசியோ 73 ஆவது நிமிடத்தில் ஆறுதல் கோல் பெற்றார். ஜியோ ரெய்னா 98 ஆவது நிமிடத்தில் 4 ஆவது கோலை அமெரிக்கா அணிக்காக அடித்தார். இந்த வெற்றி உலகக்கிண்ண வரலாற்றில் அமெரிக்கா ஒரு போட்டியில் அடித்த அதிகபட்ச கோல் எண்ணிக்கையாகவும் அமைந்தது.

Social Share

Leave a Reply