முன்நாள் பாரளுமன்ற உறுப்பினர் பார லக்ஷ்மன் உள்ளிட்ட நாள்வரை கொலை செய்த குற்றத்தின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்நாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் சட்டதன்மையினை விசாரிப்பதற்காக ஐந்து பேரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
காலஞ்சென்ற பாரத லக்ஷ்மனின் மகளும் முன்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரா, அவரது மனைவி சுமனா பிரேமச்சந்திரா ஆகியோர் குறித்த கோரிக்கை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டதரணிகளான M.A சுமந்திரன் மற்றும் இராஜ் டி சில்வா ஆகியோர் சட்டகோவை 132(1) கீழ் ஐந்து பேரடங்கிய நீதிபதிகள் குழு இந்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுதாரர்கள் சார்பாக மேல் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் இந்த கோரிக்கையை பிரேரணை மூலம் முன்வைக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டதோடு
முழுமையான ஐவரடங்கிய நீதிபதி குழுவுக்கான கோரிக்கையினை சட்டமா அதிபருக்கு அனுப்பி அவரின் ஆலோசனையின் படியே கோரிக்கைக்கான பதிலை வழங்க முடியுமெனவும், அதனை மார்ச் 3-ஆம் திகதி அடுத்த அமர்வில் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியினால் துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு, சட்டத்தின் படி செல்லுபடியற்றது எனவும், அரசியலமைப்பின் 10, 11, 12 மற்றும் 12(1) ஆகிய சரத்துக்களின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் , அறிவிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
அரசியலமைப்பின் 34 (1) வது பிரிவின் விதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி மன்னிப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை கவனமாக ஆய்வு செய்த பின்னரே பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமெனவும், மன்னிப்புக்கான நடைமுறையை ஜனாதிபதி விளக்கவில்லை என்றும் மனுதாரர்களினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற குற்றவாளிகள் இன்னும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனபதனை மனுதாரர்கள் சுட்டிக்காட்டிய அதேவேளை, துமிந்த சில்வா வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைத்தனர்.