காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 13 வயது சிறுமி நேற்று (18/12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கைவிடப்பட்ட வீடொன்றின் வளாகத்தில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி கடந்த 15 ஆம் திகதி காணாமற்போனதாக பெற்றோரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியின் சடலம் பதில் நீதவான் எஸ்.பரஞ்சோதி, சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

Social Share

Leave a Reply