பாகிஸ்தானின் கராச்சி நகரில் வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று (18/12) பதிவாகியுள்ளது.
கராச்சியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் ஏற்பட்ட குறித்த வெடிப்பு சம்பவத்தினால் குறைந்தது 16 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கராச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வெடிப்பு சம்பவத்தினால் சுமார் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
தனியார் வங்கி கட்டடத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஏராளம் பேர் கழிவுநீர் வடிகால்களுக்குள்ளும், கட்டட இடிபாடுகளுக்குள்ளும் சிக்கியுள்ளதாகவும் இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயர்வடையும் என அச்சம் வெளியிட்டுள்ளது.