இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பலக்லைக்கழ வேந்தரிடம் சான்றிதழ்களை பெற மறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தராக முருத்தொட்டுவ ஆனந்த தேரர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்க மேடையில் காத்திருந்த போதும் அவரிடம் யாரும் சான்றிதழ்களை பெறவில்லை. சிலர் நேரடியாக மறுப்பு தெரிவித்த அதேவேளை, சிலர் அவரை தாண்டி சென்று விரிவுரையாரிடம் சான்றிதழ்களை பெற்றனர்.
குறித்த வேந்தர் அண்மையிலேயே கொழும்பு பல்கலைகழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இவர் தகுதியற்றவர் எனவும், அரசியல் தலையீடு காரணமாக நியமிக்கப்பட்டவர் எனவும் சர்ச்சைகள் நிலவி வந்த நிலையியிலேயே இந்த நடவடிக்ககைகளில் மாணவர்களாக ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.