தெரிவாகாண் போட்டியில் தம்புள்ள

லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாம் சுற்று நிறைவடைந்து இரண்டாம் சுற்று இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி 06 விக்கெட்களினால் வெற்றி பெற்று இரண்டாவது தெரிவுகாண் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

கொழும்பு ஸ்டார்ஸ், தம்புள்ள ஜியன்ட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. இதில் அஞ்சலோ மத்தியூஸ் 50(34) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பத்தும் நிசங்க 42(39) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் நுவான் பிரதீப், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.


பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ள அணி 18.4 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 56(44) ஓட்டங்களையும், நஜிபுல்லா ஷர்டான் 34(28) ஓட்டங்களையும், சந்தூன் வீரக்கொடி 32(21) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டுஸ்மாந்த சமீர, சீக்குகே பிரசன்ன, ஜெப்ரி வன்டர்சாய், நவின் உல் ஹக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இரவு 8:00 மணிக்கு ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடவுள்ளனர்.

வெளியேற்றும் போட்டியில் வெற்றி பெற்ற தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி, நடைபெறவுள்ள முதலாவது தெரிவுகாண் போட்டியில் தோல்வியடையும் அணியோடு இரண்டாவது தெரிவுகாண் போட்டியில் விளையாடவுள்ளது.

இரண்டாவது தெரிவுகாண் போட்டியில் வெற்றி பெறுமணி முதலாவது தெரிவுகாண் போட்டியில் வெற்றி பெற்ற அணியோடு இறுதிப் போட்டியில் விளையாடும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுமணி லங்கா பிரீமியர் லீக் 2021 கோப்பையை வெல்லும்.

தெரிவாகாண் போட்டியில் தம்புள்ள

Social Share

Leave a Reply