தமிழக மீனவர்களை விடுவிக்க ஸ்டாலின் மத்திய அரசுடன் பேச்சு

இலங்கையில் நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலவர் மு.கா ஸ்டாலின் மத்திய அரசியிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த 43மீனவர்களையும், அவர்களது 6 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலை படுத்திய வேளையில் அவர்களை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இலங்கை அரசுடன் பேசி குறித்த மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கிணங்க, உடனடி நடவடிக்கை எடுப்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஸ்டாலினுக்கு உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்றும் மேலும் 12 தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களை விடுவிக்க ஸ்டாலின் மத்திய அரசுடன் பேச்சு

Social Share

Leave a Reply