வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் இன்றைய (11.09) விபரம்

வவுனியாவில் இன்று ஐந்தாம் நாளாக    தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. இன்றும் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள்   ஏற்றும் பணிகள் நடைபெறவுள்ளன. மூன்று தினங்கள் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை,தேவையேற்படின் மேலும் நாட்கள் அதிகரிக்கப்படுமென வவுனியா மாவட்ட தொற்றுயிலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் தெரிவித்தார். தேவையற்ற நெரிசல்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 

அரச திணைக்கள ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்றையதினம் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் வவுனியா பிரதேச செயலகங்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. நீண்டநாள் நோயாளர்களுக்கு வவுனியா வைத்திய சாலையில் காலை 9 மணி முதல் 11 மணிவரை தடுப்பு ஊசிகள் ஏற்றப்படவுள்ளன.   

இன்றைய தினம் ஈச்சங்குளம், மருக்காரம்பளை, சமனங்குளம் ஆகிய இடங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. மடுக்கந்தை , பரக்கும் மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையங்கள்  நேற்றைய தினத்தோடு நிறைவுக்கு வந்துள்ளன.    மற்றைய சகல நிலையங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் தொடர்ச்சியாக ஏற்றப்பட்டு வருகின்றன. 

கிராமசேவையாளரிடம் விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து, வரிசை இலக்கத்தையும்(டோக்கன்) பெற்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிக்குள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் .

ஆசிரியர்கள் தங்கள் கிராமசேவகர் பிரவுகளில் வரிசை இலக்கத்தை (டோக்கன்)  பெற்றுக் கொண்டு  தங்கள் கிராமசேவையாளர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். கட்டாயம் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலையத்தில்தான் ஊசிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றில்லை என சுகாதர தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஊசிபோடுதல் தொடர்பில் அறிவித்தல்கள் தொடர்ச்சியாக கிராம சேவையாளரூடாக வழங்கப்படுமெனவும், அறிவிக்கப்படாத பகுதிகள் மற்றும் வயது பிரிவுகள் தொடர்பிலும் கிராமசேவையாளர்கள் ஊடக அறிவித்தல்கள் வழங்கப்பபடுமெனவும் அவற்றினடிப்படையில் செயற்படுமாறும் வவுனியா மாவட்ட தொற்றியலாளர் வைத்தியகலாநிதி செ.லவன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வி தமிழ் இணையத்தில் தொடர்ச்சியாக வவுனியாவில் தடுப்பூசிகள் ஏற்றப்படும் விபரங்களை தந்து வருகிறோம். எமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே தகவல்களை தருகிறோம். 100% தகவல்களை வவுனியா மாவட்ட சுகாதார பணிமனை, தங்களுக்குரிய வைத்திய அதிகாரி பணிமனை கிராம சேவையாளர் ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

நாளை மறுதினம் சில நிலையங்கள் மட்டுமே செயற்பட உள்ளன. ஆகவே தங்களுக்குரிய கிராம சேவையாளர் மூலம் ஊசிபோடுமிடங்களை அறிந்துகொள்ளுங்கள். எமக்கு தகவல் கிடைக்கும் நேரத்தில் உடனடியாக அறியத்தருவோம்.

தொடர்ச்சியாக எமது இணையத்தை பார்வையிடுவதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

இன்று (11.09.2021)  தடுப்பூசி வழங்கும் நிலையங்கள்

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
வவுனியா காமினி மகா வித்தியாலயம்அரச திணைக்களங்கள்
வவுனியா மாவட்ட வைத்தியசாலைநீண்டநாள் நோயுடையவர்கள்
சைவப்பிரகாச மகளிர் கல்லூரிகல்விசார் ஊழியர்கள்
கணேசபுரம் மகா வித்தியாலயம்மரக்காரம்பளை
முருகனூர் அ.த.க பாடசாலைசமனங்குளம்       
மறவன்குளம் மகா வித்தியாலயம்  ஈச்சங்குளம்
பூவரசங்குளம் வைத்திய சாலைபூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் 05 & 06 குருக்கள் புதுக்குளம்
பாவற்குளம் வைத்தியசாலை ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02
சிதம்பரபுரம் வைத்தியசாலைஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர்
ஓமந்தை வைத்தியசாலைநொச்சிகுளம் கள்ளிகுளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் 
நவ்வி வைத்தியசாலைமருதமடு புல்மோட்டை
செட்டிகுளம் வைத்தியசாலை செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் 
கணேசபுரம் வைத்தியசாலைபெரியதம்பனை பெரியகட்டு கன்னட்டி பிரமநாலன்குளம்
நேரியகுளம் வைத்தியசாலை  நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ  பெரியபுளியங்குளம்
மாமடு வைத்தியசாலை  மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய புதுபுளங்குலமா
புளியங்குளம் வைத்தியசாலை  புளியங்குளம் வடக்கு புளியங்குளம் தெற்கு
நெடுங்கேணி வைத்தியசாலை  நெடுங்கேணி வடக்கு நெடுங்கேணி தெற்கு
கனகராயன்குளம் வைத்தியசாலை  கனகராயன்குளம் வடக்கு கனகராயன்குளம் தெற்கு மாங்குளம் சின்னடமபன் 
நைனாமடு வைத்தியசாலை  நைனாமடு அனந்தர்புளியங்குளம் பரந்தன்
குழவிசுட்டான் நிலையம்   குழவிசுட்டான் மரையிலுப்பை
ஒலுமடு அ.த.க பாடசாலை  ஒலுமடு மாமடு
கற்குளம் நிலையம்  கற்குளம் மருதோடை பட்டிக்குடியிருப்பு ஊஞ்சல்கட்டி வெடிவைத்தகல்லு 
போகஸ்வெவ வைத்தியசாலைபிரப்பன்மடுவ
உலுக்குளம் வைத்தியசாலை  உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400
நடமாடும் சேவை  அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ
வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் இன்றைய (11.09) விபரம்

Social Share

Leave a Reply