சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க உத்ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று (22/12) முன்னிலைப்படுத்திய போது, அவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணாமல்போயிருந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனா கடந்த 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

பிறப்புறுப்பில் ஏற்படுத்தப்பட்ட பலத்த காயங்கள் காரணமாகவே சிறுமியின் மரணம் ஏற்பட்டுள்ளமை முல்லைத்தீவு சட்ட வைத்திய நிபுணரால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Social Share

Leave a Reply