நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்தி குழு கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (22/12) இடம்பெற்றது.
இதன்போது நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களின் சுகாதாரம், கல்வி, பாதை அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் கொட்டகலை தழிழ் மகா வித்தியாலயத்திற்கு புதிய கட்டடம் அமைப்பதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தமைக்கு, இக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.