2021ஆம் ஆண்டு O/L விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை, எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சார்த்திகள் உரிய விண்ணப்பங்களை கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க முடியும்.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, விண்ணப்பப் படிவங்களின் வழி காட்டுதல்கள் மற்றும் மாதிரிகள், தற்போது www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு O/L விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

Social Share

Leave a Reply