இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் வருட இறுதி விருந்துபசாரமும், ஒன்றுகூடலும் சுகததாச விருந்தகத்தில் நேற்றிரவு (27/12) இடம்பெற்றது.
இலங்கையில் விளையாட்டுத்துறை எதிர்நோக்கும் சவால்களும் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற சிரமங்கள் தொடர்பாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சகல தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி சிநேகபூர்வமாக கேட்டறிந்துக் கொண்டார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ராம் கிரிஷின் ஒருங்கிணைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்துபசாரத்தில் ஏராளமான விளையாட்டுத் துறைசார் ஊடக நண்பர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.