‘கிராமத்துடன் கலந்துரையாடல்’

பலசரக்கு தூள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின் மாதிவெல கிளை மீது,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்துக்காக மீமுரே பகுதிக்குச் சென்ற ஜனாதிபதி,பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த விற்பனைச் சபையை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

தூரப்பிரதேச பகுதிகளில் உள்ள விவசாயிகளின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பதற்கான தீர்வாகக் கடந்த ஓகஸ்ட் மாதம் பலசரக்கு சந்தைப்படுத்தல் சபை ஸ்தாபிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு உயர்ந்தபட்சவிலை, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குதல், தரமான பலசரக்கு தூள்கள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை வழங்குதல்,சந்தை ஆராய்ச்சி, ஒருங்கிணைப்பு ஒழுங்குமுறை, ஊட்டச்சத்து மற்றும் மருத்துவத் தரத்தைப் பேணுதல் உள்ளிட்ட பல நோக்கங்களுக்கு முறையான தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் இதன்மூலம் எதிர்பார்த்துள்ளது.

பத்தரமுல்ல. மாதிவெல, நுகேகொட,பம்பஹின்ன. இரத்தினபுரி,கலவான, கிரிஎல்ல. கொடாமுல்ல மற்றும் பல்லேபெத்த ஆகிய நகரங்களில் நான்கு மாத குறுகிய காலப் பகுதியில் 10 கிளைகளை சந்தைப்படுத்தல் சபை நிறுவியுள்ளது.

இதன் 11 ஆவது கிளை எதிர்வரும் 31ஆம் திகதி செவனகல நகரில் திறக்கப்படவுள்ளது.

‘கிராமத்துடன் கலந்துரையாடல்'

Social Share

Leave a Reply