நாட்டில் 41 பேருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனப்புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான பீட பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட மரபணு பரிசோதனைகளின் போதே தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தொற்று பரவல் முன்னரை விட மீண்டும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பண்டிகைக்காலம் என்பதால் பொதுமக்கள் கட்டாயம் சுகாதார வழிமுறைகளை பொது இடங்களில் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், அவ்வாறு தவறும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.