நாட்டில் ஒளடதங்களுக்குத் தட்டுப்பாடு?

நாட்டில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாக ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒளடத இறக்குமதிக்கு முன்னர் வழங்கப்பட்ட முக்கியத்துவம் தற்சமயம் குறைவடைந்துள்ள நிலையில், ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், நாணய கடிதத்தை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடுமென, இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் 80 சதவீதமான ஒளடதங்கள் இறக்குமதி செய்யப்படும் ஒளடதங்களே என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் ஒளடதங்களுக்குத் தட்டுப்பாடு?

Social Share

Leave a Reply