பரீட்சைக்குத் தோற்றவுள்ள சிறைக்கைதிகள்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் எதிர்வரும் 9 மற்றும் 15 ஆம் திகதிகளில் தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள சுசரிதோதய அறநெறி பாடசாலையும் பரீட்சை நிலையங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது. அதற்கமைய இம்முறை 4 கைதிகள் இந்த பரீட்சையை எழுதவுள்ளனர்.

சிறைத் தண்டனை கைதிகளை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றும் நோக்கில் அனைத்து சிறைச்சாலைகளிலும் அறநெறி பாடசாலை கல்வி வழங்கப்பட்டு வருவதுடன், சிறை அதிகாரிகளும் வெளி ஆசிரியர்களும், தர்மாசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த கைதிகளும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

பரீட்சைக்குத் தோற்றவுள்ள  சிறைக்கைதிகள்

Social Share

Leave a Reply