விரைவில் இங்கிலாந்து மருத்துவ துறையில் வேலை வாய்ப்புகள்

இலங்கையர்கள் விரைவில் இங்கிலாந்து மருத்துவ துறையில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இலங்கை – இங்கிலாந்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

அதற்கமைய தொழில்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட ஒன்றிணைந்த பிரேரணைக்கு இந்த வாரம் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திற்கு உட்பட்ட ஹெல்த் கெயார் கூட்டுத்தாபனம், பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து ஆகியன இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் இங்கிலாந்து மருத்துவ துறையில் வேலை வாய்ப்புகள்

Social Share

Leave a Reply