ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர கடந்த 14 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.
இவர் பிரதமரின் செயலாளராகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் ஜனாதிபதியின் அலுவலக தலைமை அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தார்.
இதேவேளை நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க நாளை (20/01) பிரதமரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.