கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி

யாழ்ப்பாணம் – கரணவாய் பகுதியில் சிறுமியொருவர் நேற்றிரவு (18/01) கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரணவாய் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே இவ்வாறு கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நெல்லியடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி

Social Share

Leave a Reply