கொள்கை வட்டி விகிதங்களை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை தலா 50 அடிப்படை புள்ளிகளில் முறையே 5.5 சதவீதம் மற்றும் 6.5 சதவீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், சட்டரீதியான கையிருப்பு விகிதத்தை தற்போதைய 4. சதவீதமாக பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்துள்ளது.