ரெஜினோல்ட் குரே காலமானார்!

முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது 74வது வயதில் காலமானார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் களுத்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் குறித்த விடுதியில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெஜினோல்ட் குரே காலமானார்!

Social Share