வவுனியாவில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றுதல் விபரம்

வவுனியா மாவட்டத்தில் 20வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஏற்கனவே சுகாதர துறையினரால் அறிவித்ததன் படி ஆரம்பித்துள்ளன.


இருப்பினும் வவுனியா நகர சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்னமும் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. வரும் வாரமளவில் அநேகமாக 27 ஆம் திகதி தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்க கூடிய நிலையுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் இன்னமும் ஏற்றப்படும் நிலையில் 20 வயது பிரிவினருக்கான ஊசிகள் இன்னமும் ஏற்றப்படவில்லை.


வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம் சுகாதர பணிமனைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றுதல் விபரம்

Social Share